பிளாக் ஃப்ரைடே, தேங்க்ஸ் கிவிங் டே

Posted: November 26, 2010 in Life, US
Tags: , , , ,

கருப்பு வெள்ளி தினம் மற்றும் நன்றி தெரிவிக்கும் நாள் .   Translation ரொம்ப  கேவலமா  இருக்கோ    🙂

பிழை இருப்பின் மன்னிக்கவும் மற்றும் சுட்டிக்காட்டவும்

thanks giving day என்பது நம்ம ஊர் பொங்கல் மாதிரி. நல்ல அறுவடைக்கு நன்றி சொல்லும் நாள் இந்த நாள்.  இதுதான் வரலாறு என்கிறது விக்கி. சுட்டி இதோ (http://en.wikipedia.org/wiki/Thanksgiving)

november மாதத்தின் நான்காம் வியாழன் இந்த  Thanksgiving Day

1863 ஆபிரகாம் லின்கனால், Civil War (Civil Warkku தமிழில் என்ன?) சமயத்தில்,  தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்ட நாள்.  http://en.wikipedia.org/wiki/Thanksgiving_%28United_States%29

1621 ஆம் ஆண்டிலிருந்து இந்த பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது.  ப்லய்மௌத்  (Plymouth) என்னும் இடத்தில முதன் முதலில் இந்த பழக்கம் ஆரம்பித்து பிறகு நாளடைவில் ஒரு பெரிய விழாவாக உருவெடுத்துள்ளது.

பொங்கலும்  ஆடித்தள்ளுபடியாக  சேர்ந்தால் அதுதான் Thanksgiving day. இன்றுதான் எனது முதல் அனுபவம். பொதுவாக நிறைய தள்ளுபடி தருவார்கள் , அனைத்தும் அடி மாட்டு விலைக்கு கிடைக்கும், பாதி விலைக்கு கிடைக்கும் என்று கூறுவார்கள். ஓர் அளவுக்கு உண்மைதான் .

நிறைய வாங்க வேண்டும் என்று ஒரு வாரமாக கூகுளில் தேடோ தேடென்று தேடி ஒரு பட்டியல் தயார் செய்தேன். நான் மட்டுமா என்ன, எந்த நண்பர் வீட்டுக்கு போனாலும் எல்லாரும் கையில் லேப்டாப் வைத்துகொண்டு என்ன வாங்குவது, ஏது வாங்குவது என்று பட்டியல் போட்டுகொண்டிருந்தார்கள், சிலர் தலையையும் பிய்த்துகொண்டிருந்தார்கள் . உதவிய சில இணையதளங்கள் இதோ

http://blackfriday.gottadeal.com/ மற்றும் http://www.blackfriday2010.com/

அனைவர் பட்டியலையும் ஒப்பிட்டு, அதிலிருந்து சில பொருட்களை copy செய்து,  ஒரு விதமாக குழம்பி கடைசியாக final list தயார் ஆனது .  Online offer மற்றும் Door buster offer இருக்கும். Door buster என்றால் கடைகளில் மட்டும் கிடைக்கும் தள்ளுபடி, அதில் பெரும்பாலும்   நாம் எதிர்பார்ப்பது போல் குறைவான விலையில் நல்ல பொருட்கள் கிடைக்கும். ஒரு கடைக்கு 10 , 20 பொருட்கள் மட்டுமே விற்பனை செய்வார்கள்.  கடை திறந்தவுடன் ஓடி போய் கவ்வ வேண்டும், இல்லையேல் வேறொருவர்    கவ்விவிடுவார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதை ஆகிவிடும்.

இதில் விசேஷம் என்னவென்றால், பாழாய்போன கடைகாரர் , கடையை காலை 4 ,5  மணிக்கே திறந்துவிடுவார் .  எந்தெந்த கடை எப்போது திறப்பார்கள் என்று plan  போட்டு முன்பே போய் நிற்க வேண்டும்.  டென்வரில், விடியற்காலையில் சுமார் 25 -29 F  இருக்கும், அதாவது சுமார் மைனஸ் 2 ,3 degree celcius இருக்கும். நிலைமையை நினைத்து பாருங்கள்.

நான், எனது தோழர் வெங்கட், அவரது துணைவியார், கார்த்திக் மற்றும் அவரது துணைவியார் ஐவரும் சேர்ந்து செல்வதென திட்டம் தீட்டி கட்டம் கட்டினோம். இரவு முழுவதும் தூங்காமல் விழித்து விடிகாலை மூன்று மணிக்கு கிளம்பினோம். முதல் கடை Target திட்டமிட்டபடி சரியாக 3 :45 வண்டியை பார்க் செய்து வரிசையில் நின்றோம். எங்கள் முன்பு ஒரு 50 -60 பேர் இருப்பார்கள், சிலர் கட்டில் போட்டு படுத்திருந்தார்கள் (***) . உள்ளே சென்று இரண்டு Western Digital 1TB USB hard disk , AAA battery மற்றும் ஒரு Nikon camera bag வாங்கினேன் .

அடுத்தது Walmart சென்று  ஒரு router மற்றும் ஒரு digital photo frame.

அடுத்து Office Depot சென்று சில பல பொருட்களை உள்ளே போட்டு,  நான் வாங்க சிறிது தாமதம் ஆனதால்,மற்ற நண்பர்கள் ஒரு   குட்டித்தூக்கம் போட, அவர்களை எழுப்பி காலை 7 மணிஅளவில் வீடு திரும்பினோம்.

*** (பி.கு.)

1 . நம்மவர்களிடையே ஒரு பேச்சு உண்டு,  தமிழன்/இந்தியன் தான் இரவே சென்று கட்டில் போட்டு இடம் பிடிப்பான் என்று; ஆனால் வரிசையில் முதலிலும், கட்டில் போட்டு இடம் பிடித்தது வெள்ளைகாரனே!!.  கடை திறந்ததும், மடை திறந்த வெள்ளம் போல் அனைத்தையும் அள்ளிக்கொண்டு போனது வெள்ளைகாரனே!!.  நம்மவர்கள் ஒழுக்கமாக, கண்ணியமாகவே இருந்தார்கள்.

2 . தமிழில் type செய்ய கொஞ்சம் குஷ்டமாக உள்ளதால் சற்று சிறிதாக முடித்துக்கொள்கிறேன்

நன்றி

1 . காலையில் பசித்த போது  , புசிக்க முறுக்கு மற்றும் பிஸ்கட் கொண்டு வந்த கார்த்திக் மற்றும் அவர் துணைவியார் திருமதி கார்த்திகா.

2 . காலையில் காபி கொடுத்த வெங்கட் துணைவியார் திருமதி ரேவதி மற்றும் தோழர் வெங்கட்.

—————-

விடியற் காலை 3 :30 மணி MST, அந்த குளுரில் Q வில் நின்று நடுங்கிய அனுபவம், ஆஆஹா என்ன சுகம்..

Advertisements
Comments
  1. MUKUND says:

    Dear VMR,reallyvery gladto see ur mail.Iappreciate ur efforts taken in that climate to get things for lower rate. keep it up this is what i want from u. before becoming a father u are going in the rt direction.wishu all the best . better luck alwys. .my blessings to u .tku ..SVK

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s